சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஹோட்டல் ஊழியரை பாராட்டு..!

322

வாடிக்கையாளர் விட்டுச் சென்ற 25 லட்சம் ரூபாயை நேர்மையாக ஒப்படைத்த ஹோட்டல் ஊழியரை, நேரில் அழைத்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பாராட்டியுள்ளார்.

நேற்று முன்தினம் அண்ணாநகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிட வந்த வாடிக்கையாளர் ஒருவர், 25 லட்சம் ரூபாய் பணத்தை அங்கேயே விட்டு சென்றார். அதை எடுத்த ஹோட்டல் ஊழியர், நிர்வாகத்திடமும் ஒப்படைத்தார். மறுநாள் வரை யாரும் பணம் அடங்கிய பையை வாங்க வராத காரணத்தால், காவல்நிலையத்தில் ஹோட்டல் நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து, பணத்தை எடுத்து ஒப்படைத்த ஊழியர் ரவி, மேலாளர் பாலு மற்றும் நிர்வாகிகளை நேரில் அழைத்த சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், அவர்களுக்கு வெகுமதி அளித்து, பாராட்டினார். 25 லட்சம் ரூபாய்க்கு யாரும் உரிமை கோராத காரணத்தினால், அந்தப் பணம் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.