நடிகர் ரஜினிகாந்தின் பேச்சுக்கு பதிலடி – விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்

154

தமிழகம் சுடுகாடாக மாறிவிடக்கூடாது என்பதற்காக தான் போராடிக் கொண்டிருப்பதாக நடிகர் ரஜினிகாந்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பதிலடிக் கொடுத்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு சமூகவிரோதிகள் தான் காரணம் என்று சிலர் கூறுவது வேதனை அளிப்பதாக கூறினார். இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியிருப்பது அவரது குரல் என்பதைவிட கார்ப்ரேட்களின் குரல் என்று கூறலாம் என விமர்சித்த திருமாவளவன், தமிழகம் சுடுகாடாக மாறிவிடக்கூடாது என்பதற்காக தான் போராடிக் கொண்டிருப்பதாக ரஜினிகாந்திற்கு பதிலடிக் கொடுத்துள்ளார்.