ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மீது வழக்கு

78

ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மீது தூத்துக்குடி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிழந்தனர். படுகாயம் அடைந்த பலர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து நலம் விசாரிக்க, ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் 144 தடை உத்தரவு மீறி தூத்துக்குடிக்கு அதிக வாகனத்தில் சென்றுள்ளனர். இந்தநிலையில், 144 தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் போது, மருத்துவமனைக்கு சென்ற மு.க.ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், கமல்ஹாசன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி 143, 188 மற்றும் 153(ஏ) பிரிவுகளின் கீழ் தென்பாகம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.