சென்னையில் மாணவர்களின் மேம்பாட்டுத் திறன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்துரையாடினார்..!

380

மாணவர்களின் மேம்பாட்டுத் திறன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டு அவர்களுடன் கலந்துரையாடினார்.மாணவர்களின் மேம்பாட்டுத் திறன் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் நேற்று தொடங்கி 2வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினர். அதேபோல், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், புதுச்சேரி துணைநிலை ஆளுனர் கிரண்பேடி ஆகியோரும் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
விழாவில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மாணவர்களின் முன்னேற்றத்திற்காக 4 விதமாக கல்வி முறைகள் வகுக்கப்பட்டு, இதன் மூலம் கல்வி அறிவு மேம்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார். இந்தியாவில் நவோதய பள்ளிகள் சிறப்பாக செயல்படுவதாக கூறிய அவர், ஆனால் தமிழகத்தில் இல்லை என்பது துரதிஷ்டவசமானது என்று தெரிவித்தார்.