5 வது இந்தியன் சூப்பர் கால்பந்து தொடர் | சென்னை – பெங்களூர் அணிகள் இன்று மோதல்

130

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர், 73 வது லீக் ஆட்டத்தில், சென்னை- பெங்களூரு அணிகள் இன்று பலப்பரிட்சை நடத்துகின்றன.

5 -வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 73-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் இன்று இரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதுவரை சென்னை அணி14 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. அதில் 11 ஆட்டங்கள் தோல்வியிலும், 2 ஆட்டங்கள் சமநிலையிலும், ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் சென்னை அணி கடைசி இடத்தில் உள்ளது.

பெங்களூருவில் நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 1 க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி இருந்தது. எனவே இன்றைய ஆட்டம் சென்னை அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற்றுள்ளன.