சென்னையிலிருந்து கர்நாடக அரசு பேருந்துகள் ரத்து! பயணிகள் தவிப்பு!

147

சென்னை, ஜூலை 25–
சென்னை கோயம்பேட்டிலிருந்து கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் செல்ல வேண்டிய அம்மாநில அரசு பேருந்து சேவை, ஊழியர்கள் போராட்டம் காரணமாக ரத்தானதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.
கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பளம், படிகள், போனஸ் மற்றும் இதர சலுகைகள் தற்போது 8 சதவீதம் என்ற அளவில் வழங்கப்படுகிறது.
இதுபோதாது, கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும் என போக்குவரத்து துறை ஊழியர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்த தோடு, அமைச்சருடனும் பேச்சு வார்த்தை நடத்­தி­னார்­கள் ஆனால் இந்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததால், உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.
கடந்த 3 மாதங்களாக போராடியும் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் விரக்தியடைந்த போக்குவரத்து துறை ஊழியர்கள், இன்று காலை 6 மணியிலிருந்து சேவைகளை இயக்காமல் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
பாதி­ப்பு
சென்னை, கோயம்­பே­ட்டி­லி­ருந்து கர்­நாடக மாநி­லத்­தி­லுள்ள பெங்களூரு, ஹீப்ளி, மைசூரு, சிமோகா, பெல­காவி, சிக்­ம­களூர், கோலார் தங்க வயல் (கே.ஜி.எப்) போன்­ற பல பகு­தி­களுக்கும் தினந்­­தோறும் 53 பேருந்­துகள் இயக்­கப்­ப­டு­வது வழக்கம்.
போராட்டம் காரணமாக இந்த சேவைகள் அனைத்தும் இன்று காலை 6 மணி­­யி­லி­ருந்து ரத்து செய்­யப்­பட்­டன. இதே­போல் கர்­நா­டக மாநி­லத்­தி­லி­ருந்து சென்­னைக்கு வரும் சேவை­களும் கடும் பாதிப்­ப­­டைந்­தன. பேருந்­துகள் இயங்­காததால் பய­ணி­க­ளுக்கு மிகுந்த சிரமம் ஏற்­பட்­டது.
தமிழ்­நாடு அரசு விரைவு போக்­கு­வ­ரத்து கழக பேருந்­து­கள் ஓசூர் வரை செல்­கின்­ற­ன. அங்கு நிலைமை எப்­படி உள்­ளது என்ற அடிப்­ப­டையில் உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என தெரி­­கி­றது.
முடிவு எப்­­போது ?
போராட்டம் குறித்து கருத்து தெரி­­வித்த கர்­நா­டக மாநில அரசு போக்­கு­வ­ரத்து துறை­யி­னர், போராட்டம் எவ்­வ­­ளவு காலத்­திற்கு நீடிக்கும் என்­பதை தெரி­விக்க இய­­லாது.
எங்கள் கோரிக்கைகள் ஏற்­கப்­படும் வரை போராட்டம் தொடரும் என தெரி­வித்­தனர்.