தூய்மையாக வைத்திருக்கும் 40 பள்ளிகளுக்கு விருதுகள் – அமைச்சர் செங்கோட்டையன்

440

373 ஆசிரியர்கள் நாளை நல்லாசிரியர்கள் விருதை பெற உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆசிரியர் தின விழா கொண்டாட்டத்தையொட்டி பள்ளிகளை தூய்மையாக வைத்திருக்கு 40 பள்ளிகளுக்கு நாளை விருதுகள் வழங்கப்படுவதாக கூறினார். யாழ்ப்பாணம் நூலகத்திற்கு 1 லட்சத்து 5 யிரம் சிறப்பு நூல்கள் அனுப்பப்பப்ட்டுள்ளதாகவும் , இலங்கைக்கு வருமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அங்கு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற இருப்பதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.