செங்கல்பட்டு – தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை நிறுத்தம்..!

190

செங்கல்பட்டு – தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவை இன்று மாலை வரை நிறுத்தப்பட்டுள்ளது.

கூடுவாஞ்சேரி – வண்டலூர் இடையே பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு – தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவை நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை எட்டரை மணி முதல் மாலை ஆறரை மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும் ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மாலை 6 மணிக்கு மேல் வழக்கம் போல் மின்சார ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.