செங்கல்பட்டில் ஜல்லிக்கட்டுக்காக தொடர் உண்ணாவிரதம் நடத்திய மாணவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படாததால் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

149

ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகம் முன்பு சட்டக்கல்லூரி மற்றும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களில் 4 பேர் திடீரென மயக்கமடைந்தனர். மேலும் உடல்நிலை மோசமடைந்ததால் அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.