செங்கல்பட்டு அருகே நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

295

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த சங்கராபுரத்தில் 10க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள குவாரிகளில் வைக்கப்படும் வெடியின் அதிர்ச்சியால் அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் விரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இங்குள்ள குவாரியில் இருந்து லிங்காபுரம் வழியாக அதிக எடைகளை உடைய கற்கறை ஏற்றிக்கொண்டு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் செல்வதால் சாலைகளும் மிகவும் சேதமடைந்து காணப்படுவதாக கூறுகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த லிங்காபுரம் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாகச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலூர் காவல் ஆய்வாளர் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.