சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் மாவோயிஸ்டுகள் 10 பேர் கொல்லப்பட்டனர்.

239

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் மாவோயிஸ்டுகள் 10 பேர் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்டுகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 25 பேர் நிகழ்விடத்திலேயே வீர மரணம் அடைந்தனர். இந்தநிலையில், சுக்மா மாவட்ட வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், அவர்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மேலும், படுகாயம் அடைந்த 5-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.