சிபிஐ-க்கு சட்டீஸ்கர் அரசு தடை..!

97

சட்டீஸ்கர் மாநிலத்தில், முன் அனுமதியின்றி விசாரணை நடத்த சிபிஐ-க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அலுவலகங்கள் தவிர, எந்த ஒரு மாநிலத்திலும் சோதனை அல்லது விசாரணை நடத்த வேண்மென்றால், முன்கூட்டியே அந்த மாநிலத்திடம் சிபிஐ ஒப்புதல் பெற வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. அண்மையில், ஆந்திர மாநிலத்தில் முன் அனுமதியின்றி விசாரணை நடத்த சிபிஐ-க்கு தடை விதித்து, அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், சிபிஐ சோதனைக்கு தடை விதித்தார். இந்நிலையில், சட்டீஸ்கர் மாநில அரசும் இதே நடவடிக்கையை எடுத்துள்ளது.

இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சட்டீஸ்கர் அரசு எழுதியுள்ள கடிதத்தில், புதிய விவகாரங்களில் சிபிஐ தனது அதிகார வரம்பை சட்டீஸ்கர் மாநிலத்திற்குள் முன் அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு 2001 ஆம் ஆண்டு அளித்திருந்த ஒப்புதலை மாநில உள்துறை திரும்ப பெற்றது.