சந்திரயான் -2 பயணத்தின் ஒத்திகை வெற்றி..!

123

சந்திரயான் -2 பயணத்தின் ஒத்திகை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து, நாளை திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

கடந்த 15ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் அனுப்புவது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, சந்திராயன்-2 விண்கலம் நாளை பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்தது.

இந்த நிலையில், சந்திரயான் -2 பயணத்தின் ஒத்திகை வெற்றிகரமாக முடிந்தது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த ஒத்திகை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திட்டமிட்டபடி, சந்திராயன் 2 நாளை விண்ணில் பாயும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், விண்கலத்தின் பயண நாட்கள் 47 நாட்களாக குறைக்கப்பட்டு, செப்டம்பர் முதல் வாரத்தில் சந்திராயன்-2 நிலவில் தரையிறங்கி தன்னுடைய ஆய்வை மேற்கொள்ளும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.