சந்திராயன் 2 விண்கலம் ஜூலை 22-ம் தேதி பிற்பகல் 2.43க்கு விண்ணில் ஏவப்படும்..!

90

ஜூலை 22-ம் தேதி ‘சந்திரயான்-2’ விண்கலம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 15-ந் தேதி அதிகாலை 2.51 மணிக்கு சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் மார்க் 3 ராக்கெட் மூலம் நிலவின் தென்பகுதியை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட இருந்த சந்திராயன் 2 விண்கலம், கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறை விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் இணைந்து பணியாற்றி சரி செய்து விட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனையடுத்து, சந்திராயன் 2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் ஜூலை 22-ம் தேதி பிற்பகல் 2.43க்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.