2019 பொதுத்தேர்தலில் எக்கட்சியுடன் கூட்டணி கிடையாது : தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ்

233

2019 பொதுத்தேர்தலில் எக்கட்சியுடன் கூட்டணி கிடையாது என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் தெலுங்கானா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக கூறினார். இந்த தேர்தலில் எந்த கட்சியுடனும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கூட்டணி வைக்காது என்று கூறிய முதலமைச்சர் சந்திரசேகரராவ், தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார். ஓரிரு நாட்களில் கட்சியின் பொலிட் பீரோ கூட்டத்திற்கு பின்னர் செப்டம்பர் 2-ஆம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறிய அவர், ஒடிசாவில் பிஜூ ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் போலவே, தெலுங்கானாவிலும் ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்துள்ளார்.