ஏழைகளுக்கான புதுமனை புகுவிழா திட்டம்..!

213

ஆந்திராவில் ‘புதுமனை புகுவிழா’ திட்டத்தின் கீழ், 3 லட்சம் ஏழைகளுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு வீடுகளை வழங்கினார்.

ஆந்திர மாநில அரசு ஏழைகளுக்கான ‘புதுமனை புகுவிழா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின்படி வீடுகள் இல்லாத ஏழை குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, விஜயவாடாவில் நடைபெற்ற விழாவில் 3 லட்சம் பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கினார். இத்திட்டம் தொடர்பாக பேசிய அமைச்சர் கலவ ஸ்ரீநிவாசலு, 2019-ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் வீடுகள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.