மாநில கட்சிகள் ஒன்றிணைந்து 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

423

மாநில கட்சிகள் ஒன்றிணைந்து 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தெலுங்கு தேசம் கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிவில் மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்களாக திகழ்வார்கள் என்றார். பா.ஜ.க-வை விழ்த்த அனைத்து மாநில கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என அவர் கேட்டுகொண்டார். தொடர்ந்து பேசிய அவர், அடுத்த தேர்தலில் வெற்றி என்பது பாஜக வுக்கு எட்டாத கனவாக அமையும் என்றார். மத்திய அரசால், வங்கிகள் திவாலாகிவிட்டதாகவும், வங்கி நடைமுறைகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடி, இதுவரை அறிவித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டிய சந்திரபாபு நாயுடு, ஆந்திராவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜக முயன்று வருகிறது என்றார்.