ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சொந்த ஊரில் ஐந்தரை கோடி ரூபாய் செலவில் 24 மணி நேர மருத்துவமனை..

569

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சொந்த ஊரில் ஐந்தரை கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 24 மணி நேர மருத்துவமனையை தொடங்கி வைத்தார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சித்தூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான புள்ளயாகாரு பள்ளிக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் ஐந்தரை கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 30 படுக்கை வசதிகளை கொண்ட 24 மணி நேர மருத்துவமனையை அவர் தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த மருத்துவமனையில் திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள ஸ்விம்ஸ் மருத்துவமனையை விட சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்படும் என்றார்.