தமிழகத்தில் நாடகம் அரங்கேற்றியது போன்று ஆந்திராவில் நடத்த முடியாது – பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு பதிலடி..!

717

ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகளை வைத்துக் கொண்டு தமிழகத்தில் நாடகம் அரங்கேற்றியது போன்று, பிரதமர் மோடி ஆந்திராவில் நடத்த முடியாது என முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக காணொலி காட்சி மூலம் தெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் பேசினார். ஆந்திராவில் தனக்கு எதிராக ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பவன் கல்யாணை பாஜக பின்னால் இருந்து இயக்கி வருவதாக சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டினார். தமிழகத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகளை வைத்துக்கொண்டு, பிரதமர் மோடி நாடகம் அரங்கேற்றியது போன்று ஆந்திராவில் நடத்த முடியாது என முதல்வர் சந்திரபாபு நாயுடு சூசகமாக சுட்டிக் காட்டினார். நாடு முழுவதும் மோடிக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் அலை வீசுகிறது என்று கூறிய அவர், உத்தரப்பிரதேச, பீகார் மக்களவை இடைத்தேர்தல் முடிவுகளே இதற்கு உதாரணம் என குறிப்பிட்டார்.