ஆந்திர மக்களின் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் என, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து போராடி வருகிறார். இந்தநிலையில் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த சந்திரபாபு நாயுடு, மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும், மத்திய அரசை கண்டிக்கும் விதமாக கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநிலத்திற்கான நீதியை மத்திய அரசிடம் கேட்கிறேன், ஆனால் மத்திய அரசும், பாஜகவும் பதிலுக்கு தாக்கி பேசி வருவதாக குறிப்பிட்டார்.
மேலும் ஆந்திர மக்களின் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளதாகவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். தேர்தலின்போது, பிரதமர் அளித்த வாக்குறுதி குறித்த காட்சிகள் சட்டசபையில் திரையிடப்பட்டன.