4வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றி அசத்தல்..!

355

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி ஜோகோவிச் விம்பிள்டன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் கடந்த 3ஆம் தேதி லண்டன் நகரில் தொடங்கியது. இதன் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனுடன், செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் பலப்பரீசை நடத்தினார். பட்டத்தை வெல்லும் முனைப்பில் இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முன்னணி விரர்களான ரோஜர் பெடரர், இஸ்னரை வீழ்த்திய ஆண்டர்சன் இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இதனால் 2க்கு 6, 2க்கு 6, 7க்கு 6 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் விம்பிள்டன் பட்டத்தை தட்டிச்சென்றார். ஜோகோவிச் 4வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றுவது குறிப்பிடத்தக்கது.