கரூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்ற இரண்டு வாலிபர்களை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

கரூர் வீரராக்கியம் கிராமத்தை சேர்ந்தவர் அருண். இவர் தமது வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அருணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் பறிக்க முயன்றுள்ளனர். அவர் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், மர்ம நபர்களை விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.