இந்தியாவும், தமிழகமும் ஆபத்தான நிலையில் உள்ளன – மதிமுக பொதுச்செயலாளார் வைகோ

293

மத்திய, மாநில அதிகார ஆட்சிகளின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாக மதிமுக பொதுச்செயலாளார் வைகோ தெரிவித்துள்ளார்.

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய வைகோ, ஆபத்தான காலகட்டத்தில் தமிழகமும், இந்தியாவும் சிக்கித் தவிப்பதாக குறிப்பிட்டார். சமூக அமைப்புகளை தடை செய்யப் போவதாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் மத்திய, மாநில அதிகார ஆட்சிகளின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாக எச்சரித்தார். போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற தேர்தல் பணத் தேவைக்காக பசுமை வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.