1,907 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி – செங்கோட்டையன் பெருமிதம்

301

தமிழகத்தில் ஆயிரத்து 907 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 91 புள்ளி ஒரு சதவீதமாக உள்ளதாக கூறிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவிகள் 94 புள்ளி ஒரு சதவீதமும், மாணவர்கள் 87 புள்ளி 7 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்தார். தேர்ச்சி விகிதம் அடிப்படையில் 97 சதவீதம் தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாக கூறிய அவர், ஆயிரத்து 907 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.