மத்திய அமைச்சரவை நாளை விரிவாக்கம் நிதின்கட்கரிக்கு ரெயில்வே துறை !

473

மத்திய அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது. நிதின் கட்கரிக்கு ரெயில்துறையும், நிர்மலா சீதாராமனுக்கு கேபினட் அந்தஸ்தும் வழங்கப்படுகிறது.
அண்மையில் நடந்த ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த ராம்நாத் கோவிந்தும், வெங்கையா நாயுடுவும் வெற்றி பெற்று பதவியேற்றுவிட்டனர். இதனையடுத்து அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான திட்டங்களை இப்போதே பிரதமர் மோடியும் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் வகுக்கத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி, மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்ச்சர் மகேந்திர நாத் பாண்டே, நீர்வளத்துறை இணை அமைச்சர் சஞ்சிவ் பலியான் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதே போல் கல்ராஜ் மிஸ்ரா, உமா பாரதி, சவுத்திரி வீரேந்திர சிங், பகன் சிங் குலஸ்தே ஆகியோரும் மத்திய மந்திரி பதவியிலிருந்து விலக முன்வந்துள்ளனர்.இதே போல் விமான போக்குவரத்து துறை மந்திரி கஜபதி ராஜூ, விவசாயத்துறை மந்திரி ராதா மோகன் சிங் ஆகியோர்களின் இலாகாக்கள் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. தொடர் விபத்துக்களால் பதவியிலிருந்து விலக முன்வந்த சுரேஷ் பிரபின் அமைச்சர் பதவியும் மாற்றப்படுகிறது. இதனால் நிதின் கட்கரிக்கு ரெயில்வே துணு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தகத் துறை இணை மந்திரி நிர்மலா சீதாராமன் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவார் என்று கூறப்படுகிறது.