மத்திய அரசு இயற்கை வளங்களை அழித்து வருகிறது-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ!

157

தமிழகத்தின் இயற்கை வளத்தை அழிக்கும் நோக்கத்தோடு மத்திய அரசு செயல்படுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல மாதங்களாக நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கிராமமக்கள் போராடி வருவதை சுட்டிகாட்டினார். கூடிய விரைவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் தங்கள் சார்பில் கோரிக்கை வைத்தாக தெரிவித்த வைகோ, தேசிய பசுமை தீர்பாயத்தை அழிக்க மத்திய அரசு முயல்வதாக குற்றஞ்சாட்டினார்.