ஏழுமலையான் கோவிலில் நிர்மலா சீதாராமன் சாமிதரிசனம்..!

188

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமிதரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமிதரிசனம் செய்வதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் நேற்று திருப்பதி வந்தார். விமான நிலையம் வந்த அவரை, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி. விஜய்சாய் ரெட்டி, திருப்பதி எஸ்.பி. அன்புராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து கார் மூலம் ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகைக்கு சென்ற நிர்மலா சீதாராமனை கோவில் நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்நிலையில் நிர்மலா சீதாராமன், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமிதரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து சகஸ்கர தீப அலங்கார சேவையிலும் அவர் பங்கேற்றார். இதையடுத்து நிர்மலா சீதாராமனுக்கு கோவில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்தப்பிரசாதங்கள் வழங்கப்பட்டன.