டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

324

பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததையடுத்து, நாடு முழுவதும் வங்கிகளில் பண பரிவர்த்தனை முற்றிலும் குறைந்துள்ளது. இந்தநிலையில், டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவித்தால் ஊதியத்தின் மதிப்பில் இருந்து 10 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் 10 சிறந்த மாவட்ட ஆட்சியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விருது வழங்கப்படும் என்றும், இத்தகைய நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் 50 பஞ்சாயத்துக்களுக்கும் விருது வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சேவையில் சிறப்பாக பணிபுரியும் 10 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு டிஜிட்டல் பேமெண்ட் சாம்பியன்ஸ் விருது வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.