பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

0
93

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அடுத்த மாதம் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. ஆனால், உத்தரப்பிரதேசம், உத்தரக்காண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி மார்ச் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பட்ஜெட் அறிவிக்கப்படும் நலத்திட்டங்கள் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. எனவே, சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் பட்ஜெட்டை தாக்கல் செய்யவேண்டும் என காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. பட்ஜெட் தாக்கல் செய்வதை தள்ளிவைக்கக்கோரி எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளன.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க முடியாது மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட சில மாநிலங்களுக்ககாக மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் வாக்காளர்களை கவர வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY