இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு

118

இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட ஒடிசா, கர்நாடகா, இமாச்சல் பிரதேசத்துக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு 4432 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

பானிப் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒடிசா, வறட்சியால் பாதிக்கப்பட்ட கர்நாடகா மற்றும் புயல் சீற்றத்தால் சேதத்துக்கு உள்ளான இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்கள், மத்திய அரசிடம் நிவாரண நிதி வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தன. இந்நிலையில், இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நடைபெற்ற உயர்நிலை குழு கூட்டத்தில், 3 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்தவகையில், தேசிய பேரிடர் நிவாரண நிதி மூலம் ஒடிசாவுக்கு 3338 கோடி ரூபாயும், கர்நாடகாவுக்கு 1029 கோடியும், இமாச்சல பிரதேசத்துக்கு 64.49 கோடி என மொத்தம் 4432 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள வெள்ள நிவாரணத் தொகையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை.