காவிரி நடுவர்மன்றத்தைக் கலைத்து மத்திய அரசு அரசாணை வெளியீடு!!

255

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து காவிரி நடுவர்மன்றத்தைக் கலைத்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

காவிரி விவகாரத்தில், மாநிலங்களுக்கிடையேயான பிரச்னை, நீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு தீர்வு காணும் வகையில், கடந்த 1990 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2007 ஆம் ஆண்டு காவிரி விவகாரம் தொடர்பாக, நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. இதனையடுத்து, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்தும் படி உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதால், சுமார் 28 ஆண்டுகளாக இயங்கி வந்த காவிரி நடுவர் மன்றம் கலைக்கப்பட்டுள்ளது.