7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தும் விவகாரம்,முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல்!

551

7வது ஊதிய குழு அறிக்கையை நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சண்முகம், முதலமைச்சர் எடப்பட்டி பழனிசாமியிடம் வழங்கினார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல் படுத்தப்பட்டன. இதையடுத்து தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று அரசுப் பணியாளர்கள், ஊழியர்கள் சங்கங்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய நிதித்துறை செயலர் சண்முகம் தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளை கேட்டது. இதனையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் 7வது ஊதிய குழுவின் அலுவலர் குழு அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் குழுவின் தலைவர் சண்முக வழங்கினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.