ஊதியத்தை மின்னணு முறையிலும், காசோலையாகவும் வழங்க அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

260

ஊதியத்தை மின்னணு முறையிலும், காசோலையாகவும் வழங்க அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தொழில், வணிக நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கான ஊதியம் வழங்குவது தொடர்பான சட்டத் திருத்த மசோதா மக்களவையில் கடந்த 15-ஆம் தேதி அமளிக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

இதன்படி, ஊதியம் வழங்கல் சட்டம் 1936-இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அவசர சட்டம் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தொழில், வணிக நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கான ஊதியத்தை மின்னணு முறையில் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் அல்லது, காசோலை மூலம் வழங்க வேண்டும். பணத்தட்டுப்பாட்டால் பொதுமக்கள் சிரமங்களை சந்தித்து வரும்நிலையில், பணியாளர்கள் ஊதியத்தை ரொக்கமாக அளிக்காமல், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.