தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது வழங்கப்படும் – மத்திய உள்துறை அமைச்சகம்

193

சிறப்பாக பணியாற்றியதற்காக தமிழக காவல்துறை அதிகாரிகள் 5 பேருக்கு குடியரசு தலைவர் விருது வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு ஆண்டுதோறும் சுதந்திர தினத்தின் போதும், குடியரசு தினத்தின் போது குடியரசுத் தலைவரின் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி இந்த ஆண்டுக்கான விருது பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட் டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த துணை ஆணையர் லட்சுமணன், கூடுதல் எஸ்.பி மாரிராஜன், ஆய்வாளர்கள் தீபா, கே.பி. சாந்தி, வி. சந்திர சேகரன் ஆகிய 5 பேருக்கு குடியரசு தலைவர் விருது வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.