பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகமானது – மத்திய அரசு

324

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகமானது தான் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிகப்பெரிய சரிவை சந்தித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை கடந்த 16ஆம் தேதி முதல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாய் 59காசாகவும் டீசல் விலை லிட்டருக்கு 73 ரூபாய் 84 காசாகவும் இருந்தது. பெட்ரோல், டீசல் விலை இந்தளவிற்கு உயர்ந்திருப்பது இதுவே முதன்முறையாகும்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பொருளாதார துறை அதிகாரி ஒருவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகமானதுதான் என்று கூறினார். சில நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி திட்டமிட்டப்படி நடைபெறவில்லை என்றும், விரைவில் கச்சா எண்ணெய் விலை 70 முதல் 71 டாலர் என்ற நிலைக்கு வரும் எனவும் நம்பிக்கை அளித்தார்.