மத்திய அரசைக் கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்ட நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி கைது செய்யப்பட்டார்.

380

மத்திய அரசைக் கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்ட நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி கைது செய்யப்பட்டார்.
காவிரி விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய அரசு மீது புகார் கூறி மனித நேய ஜனநாயக கட்சி சார்பில், நாகையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. நாகை சட்டமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான, தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசைக் கண்டித்து, கோஷங்களை எழுப்பியபடி, ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரை அக்கட்சியினரை போலீசார் கைது செய்தனர். இதனயைடுத்து, போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
மறியல் போராட்டம் காரணமாக நாகையில் சேவை சுமார் அரைமணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.