கல்லறை திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிருஸ்துவர்கள் முன்னோர்களுக்கு மலர் தூவி அஞ்சலி…!

406

கல்லறை திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிருஸ்துவர்கள் முன்னோர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
உலகம் முழுவதும் ஆண்டு தோறும் நவம்பர் 2-ம் தேதியை கல்லறை திருநாளாக கிறிஸ்துவர்கள் அனுசரித்து வருகின்றனர். இந்நாளில் கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களை அடக்கம் செய்த கல்லறைகளுக்கு வர்ணம் பூசி, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில், சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறையில் இன்று கிருஸ்துவர்கள் ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கோவையில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு வருகை தந்த கிருஸ்துவர்கள் தோட்டத்தை சுத்தம் செய்து வண்ணம் பூசி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள சுனாமியால் உயிரிழந்தோரின் கல்லறையில் பேராலையம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து பேராலையத்தில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு கத்தோலிக்க கிருஸ்துவ தோட்டத்தில் கிருஸ்துவர்கள் 100க்கும் மேற்பட்டோர் தங்கள் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.