புதுக்கோட்டை மாவட்டத்தில் காணாமல்போன செல்போன்களை கண்டுபிடித்த தனிப்படை போலீசார்.!

112

புதுக்கோட்டையில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் செல்போன் திருடு போனதாக வந்த புகார்களின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். இதில் கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை உரியவரிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல் துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் கலந்து கொண்டு, உரியவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். விலை உயர்ந்த பொருட்களை பொதுமக்கள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

செல்போன் திரும்பக் கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாவும், கண்டுபிடித்துக் கொடுத்த காவல் துறைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர் .