கருணாநிதிக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி..!

742

பதிலை எதிர்பார்க்காமல் உடன் பிறப்புகளுக்கு 7 ஆயிரம் கடிதங்களை எழுதியவர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டப்பட்டது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி, சென்னை ஆழ்வார்பேட்டை மியூசிக் அகடாமியில் நடைபெற்றது. இதில் பத்திரிகை ஆசிரியர்கள், நடிகர், நடிகைகள், கவிஞர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வந்திருந்தனர். தன்னுடைய சொல்லால் தமிழக மக்களை கட்டிப்போட்டவர் என்றும், பதிலை எதிர்பார்க்காமல் உடன் பிறப்புகளுக்கு 7 ஆயிரம் கடிதங்களை எழுதியவர் எனவும் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டப்பட்டது. மிகச் சிறந்த இலக்கியவாதியான அவர், எழுதாத தமிழ் இல்லை, தெளிவுரையும் இல்லை என விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.