தமிழகத்தில் முதன் முறையாக தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன

241

தமிழகத்தில் உள்ள பெரிய மீன்பிடித்துறைமுகங்களில் தூத்துக்குடி வ.உ.சி மீன்பிடித்துறைமுகமும் ஒன்று. இங்கு 265க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீன்பிடித்தொழில் நடைபெற்று வருகிறது. இந்த துறைமுகத்தின் அனைத்து சொத்துக்கள் மற்றும் பராமரிப்பு ஆகிய பணிகளை 2013 ஆம் முதல் மீன்பிடித்துறைமுக மேலாண்மை குழு கவனித்து வருகிறது.

மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெறும் சிறு சிறு மோதல் சம்பவங்கள், திருட்டு உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் மற்றும் சில விரும்பத்தகாத சம்பவங்களை தடுக்க மீன்பிடித் துறைமுகத்தில், மேலாண்மைக் குழு நிதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் அறிவுறுத்தினார். அதன்படி தமிழகத்தில் முதல் முறையாக இங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.