ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில், பணப் பட்டுவாடாவைத் தடுக்க 225 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் …!

355

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில், பணப் பட்டுவாடாவைத் தடுக்க 225 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் வாக்காளர்கள் பார்வைக்காக அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச் சாவடியை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில், பணப்பட்டுவாடாவைத் தடுக்க 225 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
இடைத்தேர்தலுக்காக இரண்டாயிரம் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.