சிபிஎஸ்இ பொதுத்தேர்வை எதிர்கொள்ள விரைவில் தேர்வு மையங்கள்-அமைச்சர் செங்கோட்டையன் !

287

மத்திய அரசு நடத்தும் பொதுதேர்வை எதிர்கொள்ளும் வகையில், பள்ளி மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில், அறிவியல் பூங்கா மற்றும் ஆய்வகத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், பள்ளி மாணவர்கள் அனைவருக்கும், ஆதார் எண்ணுடன் இணைத்து ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என தெரிவித்தார். 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, மத்திய அரசால் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில், தமிழக முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று செங்கோட்டையன் கூறினார்.