கருணை மதிப்பெண் வழங்க ஆணையிட்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு..!

308

நீட் தேர்வு விவகாரத்தில் கருணை மதிப்பெண் வழங்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தர விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்துள்ளது.

நீட் தேர்வில் தமிழில் கேட்கப்பட்ட கேள்விகளில் குளறுபடிகள் ஏற்பட்டதால், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது. மேலும் சிபிஎஸ்இ புதிய நீட் தேர்வு தரவரிசைப் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் அதன்படி கலந்தாய்வு நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதனால் மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே நீட் தேர்வு விவகாரம் குறித்து சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎஸ்இ நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.