சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 86.7 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி..!

201

சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 86.7 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வினை 16 லட்சத்து 24 ஆயிரத்து 682 பேர் எழுதி இருந்தனர். இதில் 88.67 சதவீத மாணவியரும், 85.23 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் சராசரி 86.7 சதவீதம் ஆகும். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பிரகார் மிட்டல், உத்தர பிரதேசத்தை சேர்ந்த ரிம்ஜிம் அகர்வால், ஷாம்லி பகுதியை சேர்ந்த நந்தினி கார்க், கேரள மாநிலத்தை சேர்ந்த ஜி.ஸ்ரீலட்சுமி ஆகியோர் 500க்கு 499 மதிப்பெண் எடுத்து தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளனர். மண்டலங்கள் அளவில் 99.6 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடத்தையும், 97.37 சதவீதத்துடன் சென்னை இரண்டாம் இடத்தையும், 91.86 சதவீதத்துடன் அஜ்மீர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.