நவீன கல்வி முறைக்கு ஏற்ப சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

178

நவீன கல்வி முறைக்கு ஏற்ப சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ மூலம் நாடு முழுவதும் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. உலகில் மாறி வரும் தொழில்நுட்பம், கல்வியின் தேவை, மாணவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப, பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம் உள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ அமைப்பு, தங்கள் பள்ளி களுக்கான பாடத்திட்டத்தை மாற்றி, தரத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்காக கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், பெற்றோர்களின் கருத்து கேட்பு உயர்மட்ட ஆலோசனை கூட்டம், டில்லியில் வரும், 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. பாடத்திட்டம், தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வருதல், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைப்படும் பாடங்களை கொண்டு வருதல் உள்ளிட்ட அம்சங்கள் பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படுகிறது.