பொள்ளாச்சியில் இளம் பெண்களை பலாத்காரம் செய்த விவகாரம், சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் தீவிர ஆய்வு

147

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள குற்றவாளி சபரிராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்து, அதனை வீடியோ படமாக எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக பிப்ரவரி மாதத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் என நான்கு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு மார்ச் 12 ஆம் தேதி குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது. பின்னர் சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இன்று, பொள்ளாச்சி ஜோதிநகரில் உள்ள எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் தீவிர ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.