சோதனை ஏன்? -சி.பி.ஐ விளக்கம்

129

குட்கா ஊழல் தொடர்பாக 35 இடங்களில் சோதனை நடத்தியது ஏன் என சி.பி.ஐ விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் வாயில் போட்டு மெல்லும் புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்து வந்ததாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து 2013ம் ஆண்டு முதல் குட்கா மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் தடை செய்யப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

குட்கா தடை உத்தரவு அமலில் இருந்த போது, கடந்த 2013ம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, சட்டவிரோதமாக குட்கா தயாரிப்பதற்கும், விற்பனை செய்யவும் ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை உள்பட 35 இடங்களில் போலீஸ் துறையை சார்ந்த அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.