சி.பி.ஐ. புதிய இயக்குனர் பதவிக்கு 4 பேரின் பெயர்கள் பரிந்துரை..!

80

சி.பி.ஐ. புதிய இயக்குனர் பதவிக்கு 4 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா, தீயணைப்பு துறை இயக்குனர் பதவியை ஏற்க மறுத்து ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, 4 ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் புதிய சிபிஐ இயக்குனர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. மும்பை போலீஸ் கமிஷனர் சுபோத்குமார் ஜெய்ஸ்வால் மற்றும் உத்தரப் பிரதேச டி.ஜி.பி. ஓ.பி.சிங் ஆகியோரின் பெயர்கள் முன்னிலை வகிக்கின்றன.

இவர்கள் தவிர தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் ஒய்.சி.மோடி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இறுதி பட்டியலில் 10 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பரிந்துரை பட்டியல் பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய மத்திய தேர்வுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.