கொடநாடு விவகாரம் | சிபிஐ விசாரணைகோரி வழக்கு

100

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொடநாடு விவகாரத்தில் குற்றவாளிகள் சயன், மனோஜ் மற்றும் பத்திரிக்கையாளர் மேத்யூஸ் சாமுவேல் பேட்டியளித்ததை அடுத்து, தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கொடநாடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி, டிராபிக் ராமசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேமுதிக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் டிராபிக் ராமசாமி சார்பில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கொடநாடு வழக்கை மாநில போலீஸார் விசாரித்தால், நியாயமாக நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.