ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

172

ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தமிழக அரசு நேற்று அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இதையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் பணிகளில் அந்தந்த மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அவசர சட்டத்துக்கு தடைவிதிக்கக்கோரும் மனுவை பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை முன்கூட்டியே அறிந்த தமிழக அரசு தற்போது உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக யார் வழக்கு தொடர்ந்தாலும் தமிழக அரசின் கருத்தை கேட்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நாளையே விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது